அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு ஆதரவாக யாழ்.மறைமாவட்ட அருட்தந்தையர்கள்..!
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் , மே 18 முள்ளிவாக்கால் 2026ஆம் ஆண்டு நினைவுகூரலின் பின்புலத்தில் வெளியிட்ட கருத்தை, இலங்கைக் கத்தோலிக்க ஊடக ஆணைக்குழுவின் பணிப்பாளர் அருட். யூட் கிறிஷாந்த பெர்னாண்டோ மறுத்தும் எதிர்த்தும் இருக்கிறார்.
இவர்கள் இருவரின் நிலைப்பாடுகள், எதிரும் புதிருமானதாக உள்ளது. அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்தைத் தமிழ்மக்கள் முழுமையாக ஆதரித்தும், அருட்யூட் கிறிஷாந்த பெனாண்டோவின் கருத்தை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.
இந்தநிலையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு ஆதரவாக நிற்பதாக யாழ்.மறைமாவட்ட அருட்தந்தையர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவித்த அவர்கள், எமது இனத்திற்கு ஆண்டாண்டு காலமாக இடம்பெற்றிருப்பது இனப்படுகொலைதான். இதற்கு வரலாற்றிலே ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இதனை உலகநாடுகளே ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த இனப்படுகொலையின் உச்சம் தான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது என குறிப்பிட்டுள்ளனர்.
முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri