லங்கா ரி10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
2024ஆம் ஆண்டிற்கான லங்கா ரி10(Lanka T10) சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், போட்டிகள் அனைத்தும் பல்லேகலை(Pallekele) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
லங்கா ரி10 சூப்பர் லீக்
இந்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், நுவரெலியா கிங்ஸ், கண்டி போல்ட்ஸ், கோல் மார்வல்ஸ், கொழும்பு ஜகுவார், அம்பாந்தோட்டை பங்க்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஒரு இன்னிங்ஸுக்கு 10 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் 25 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, இன்றைய தினம்(11) மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், ஜஃப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்ட பங்க்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் முதலாவது போட்டி இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள்
அத்துடன் நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜகுவார் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று மாலை 6.15 அளவிலும் கெண்டி போல்ட்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இரவு 8.30 அளவிலும் ஆரம்பமாகவுள்ளன.
இந்த தொடரில் ஷகிப் அல் ஹசன்(Shakib Al Hasan), அலெக்ஸ் ஹல்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், இப்திகார் அஹமட், கரீம் ஜேனட், சௌமியா சர்க்கார், இமாத் வாஷிம், மொஹமட் ஹமீர், கைல் மில்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
