கோலாகலமாக நடைபெற்று முடிந்த நம்மவர் பொங்கல் விழா
ஐ.பி.சி தமிழ் லங்காசிறி ஊடகங்களின் ஏற்பாட்டில் நேற்று(15.01.2026) தெகிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் நடைபெற்ற நம்மவர் பொங்கல் விழா நேயர்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நெய்யின் வாசனைபோல் பரிமளிக்கும் உற்சாகத்துடன், மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் நிகழ்வை மேலும் மனநிறைந்த அனுபவமாக மாற்றின.
இந்த விழாவிற்கு பிரதான அனுசரணையாளராக IDM தனியார் பல்கலைக்கழகம் மற்றும் இணை அனுசரணையாளர்களாக Little Lion மற்றும் Fadna நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்கின.

மூன்று பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி பரிமாறப்பட்டு, அதைத் தொடர்ந்து மாணவர்களின் இசை, நடனம் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கொண்டாடும் சிறப்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஐ.பிசி தமிழ் லங்காசிறி சார்பில் இதற்கான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்வு தமிழ் கலாசாரத்தின் செழிப்பையும், பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும்ம் அரிய வாய்ப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விழா, தமிழ் மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு மேடை மட்டுமல்ல, சமூக ஒற்றுமையையும், பாரம்பரியத்தின் பெருமையையும் வலியுறுத்தும் ஒரு பிரகாசமான சம்பவமாக மாறியுள்ளது.
எதிர்காலத்திலும் இத்தகைய விழாக்கள் தொடர்ந்தும் நடக்குமென உறுதி செய்யும் விதமாக, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.










