அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சிலவற்றின் விலைகளைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இவ்வாறு 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பெரிய வெங்காயம், டின் மீன், சிவப்பு சீனி, பருப்பு, நாட்டு அரிசி, கோதுமை மா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என சதொச நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய விலை விபரங்கள்
சதொச நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய, பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 140 ரூபாவாகும்.
டின் மீன் 425 கிராமின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 395 ரூபாவாகும்.
மேலும், சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 255 ரூபாவாகும்.
சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 265 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு அரிசியின் விலை கிலோ கிராமிற்கு 7 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 213 ரூபாவாகும்.
மேலும், கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.
அத்துடன், சிவப்பு பச்சை அரிசியின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 217 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
