சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் லங்கா சமசமாஜ கட்சியின் தகவல்
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாழும் உரிமையை உறுதி செய்தல், அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியனவற்றை உறுதி செய்வதனை முதன்மைப்படுத்தி ஆதரவளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசில் இணையமாட்டோம்: ஜே.வி.பி. |
விரிவாக ஆராய்ந்த பின் தீர்மானம்
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானவர்கள் போதியளவு போசாக்கின்றி அவதியுறுவதாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உரிய நலன்கள் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
எரிவாயு, பாடசாலை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வறுமையில் வாடும் மக்களுக்கு வாராந்தம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்க வேண்டும்: ஜேவிபியையும் அழைக்கும் டலஸ் |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
