ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டவற்றை ஒப்படைக்குமாறு கோரிய இலங்கை - மறுத்தது பிரிட்டன்
கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் போர்க்காலத்தில் அனுப்பியவற்றை வெளியிட வேண்டும் என இலங்கை விடுத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் இலங்கைக்கு தெரிவித்துள்ளன.
ஜெனீவா அமர்வு மார்ச் 23இல் முடிவடைந்திருந்தது, 47 உறுப்பினர்கள் கொண்ட பேரவை புதிய பொறுப்புக்கூறல் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
22 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததுடன், 11 நாடுகள் எதிராக வாக்களித்ததுடன், 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,