மின்சாரம் எரிபொருள் மானியங்கள் விரைவில் நீக்கப்படும்..

IMF Sri Lanka NPP Government
By Kamal May 29, 2026 04:41 AM GMT
Report

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கிரமமான முறையில் நீக்கப்படும் என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரூபாய் தொடர்பில் எழுந்த நெருக்கடி நிலை.. உண்மைத்தன்மையை அம்பலப்படுத்திய IMF அதிகாரி

இலங்கை ரூபாய் தொடர்பில் எழுந்த நெருக்கடி நிலை.. உண்மைத்தன்மையை அம்பலப்படுத்திய IMF அதிகாரி

 

முக்கிய முடிவுகள்

நாணய நிதியத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள இந்த கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் எரிபொருள் மானியங்கள் விரைவில் நீக்கப்படும்.. | Lanka Agreed To Cut Subsides

செலவுகளை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறை தற்போது சரியான பாதையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பிராந்திய மற்றும் காலநிலை தாக்கங்கள் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள், மின்சாரம், உரம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான மானியங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த எரிசக்தி மற்றும் ஏனைய மானியங்களுக்கான செலவு 100 பில்லியன் ரூபா என்ற அதிகபட்ச எல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நிவாரணப் பணிகளும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலமே ஈடுசெய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடின முயற்சிகளுக்கு மத்தியில் எட்டப்பட்ட நிதி ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கை ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக, இந்த மானிய முறைகளை எதிர்வரும் 2026 செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

மேலும் தேவை ஏற்பட்டால் அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மிகவும் தேவயுடைய மக்களுக்கு தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும் - ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும் - ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

695 மில்லியன் டொலர்

2025 டிசம்பர் இறுதிக்குள் எட்டப்பட வேண்டிய அனைத்து அளவுசார் செயல்திறன் அளவுகோல்களையும் குறியீட்டு இலக்குகளையும் இலங்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

மின்சாரம் எரிபொருள் மானியங்கள் விரைவில் நீக்கப்படும்.. | Lanka Agreed To Cut Subsides

அத்துடன், பெப்ரவரி இறுதிக்குள் 22 கட்டமைப்பு இலக்குகளில் 16 இலக்குகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.

எனினும், சைபர் குற்றமொன்று காரணமாக சில வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் தாமதமானதால், 'புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு பற்றாக்குறைகளை ஏற்படுத்தாதிருத்தல்' என்ற தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோலை மட்டும் சிறிய அளவில் பூர்த்தி செய்ய முடியாமல் போனதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய கடன் மேலாண்மை தகவல் அமைப்பொன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையின் சாதகமான செயல்திறனைக் கருத்திற்கொண்டு, EFF திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 508 மில்லியன் எஸ்டிஆர் (SDR) – அதாவது சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை விடுவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கம் நாணய நிதியத்தின் நிர்வாகச் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட வெளிநாட்டுக் கடன் தாமதத்திற்கு தள்ளுபடி அங்கீகாரம் (Waiver) வழங்குமாறும், 2026 டிசம்பர் மற்றும் 2027 பிப்ரவரி வரையிலான புதிய கட்டமைப்பு மைல்கற்கள் மற்றும் இலக்குகளுக்கு அனுமதி வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவில் இலங்கை விஞ்ஞானியின் அசாத்திய கண்டுபிடிப்பு - பார்வையற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அவுஸ்திரேலியாவில் இலங்கை விஞ்ஞானியின் அசாத்திய கண்டுபிடிப்பு - பார்வையற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US