கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை நடைமுறையில் உள்ள பகுதியை சேர்ந்த மக்கள், மழை பெய்தால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2ஆம் நிலை எச்சரிக்கை
இதற்கிடையில், 2ஆம் நிலை எச்சரிக்கை பல இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் எட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, நிவித்திகல, கலவான, எஹலியகொட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள் என்பன இந்த 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கைக்குள் வருகின்றன.
இந்த எச்சரிக்கைகளின் அடிப்படையில், மண்சரிவு, பாறை சரிவுகள், வெட்டுக்கள் மற்றும் நிலம் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதலாம் நிலை எச்சரிக்கை

இதேவேளை சில இடங்களுக்கு முதலாம் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலகப் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த மஞ்சள் எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam