நிலவும் மோசமான காலநிலை! நான்கு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இரண்டாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று (26) மாலை 4.00 மணி முதல் நாளை (27) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு எச்சரிக்கைகள்
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, எஹலியகொட மற்றும் அயகம பகுதிகளுக்கு இரண்டாம் நிலை ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிடிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிக்கும் முதல் நிலை ‘மஞ்சள்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத மற்றும் கலவான பகுதிகளுக்கும் முதல் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam