நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (30) பிற்பகல் வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நில அதிர்வுகள்
இதேவேளை, இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அதிர்ச்சிகளினால் நாடு பாதிக்கப்படாது எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |