கண்டி- கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு: மூடப்பட்டுள்ள வீதி
புதிய இணைப்பு
மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் கொழும்பு-கண்டி வீதியின் கனேதென்ன பகுதி மூடப்பட்டுள்ளது.
நிலைமையை ஆய்வு செய்த பிறகு, கொழும்பு-கண்டி வீதியை மீண்டும் போக்குவரத்துக்காகத் திறப்பது குறித்து நாளை காலை தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போக்குவரத்துப் பொலிஸார் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் தற்போது லேசான மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்- அனந்தி
முதலாம் இணைப்பு
கண்டி–கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவத்தினால் மோட்டார் சைக்கிள் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
