ஹட்டனில் பாரிய மண்சரிவு! சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல் (Video)
ஹட்டன் - மஸ்கெலியா, நோட்டன் – தியகல பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழையுடனான காலநிலையையடுத்து இன்றைய தினம் (27.06.2023) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை
இதனால் நோட்டன் – தியகல வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல
,பிட்டவல,நானுஓயா,கினிகத்தேனை,கடவல வட்டவளை தியகல,ஹட்டன் உள்ளிட்ட
பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா
கொட்டகலை,தலவாக்கலை,சென்கிளையார்,நானுஓயா,ரதல்ல ஆகிய பகுதிகளில் மழையுடன்
அடிக்கடி பனி மூட்டம் நிகழ்வதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் மக்கள் மிகவும்
அவதானமாக இருக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
