வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு.. 82 பேர் மாயம் - 7 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளனர்.
அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்று (24) அதிகாலை 2.00 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேடுதல் பணி
வீடுகளின் மீது வரிசையாக மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ளதாகவும், சுமார் 30 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔴Seven people have been killed and 82 others are missing after a #landslide in #Indonesia.
— News.Az (@news_az) January 24, 2026
According to Reuters and the national disaster management agency, the natural disaster occurred in the West Bandung area of West Java province. pic.twitter.com/DpKwILeBja
நிலச்சரிவு ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால், ஏராளமான மக்கள் மண் மேட்டுக்கு அடியில் புதைந்திருப்பதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய வானிலை அதிகாரிகள் நேற்று தொடங்கி ஒரு வாரத்திற்கு மேற்கு ஜாவாவை கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்திருந்தனர்.


