பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி
பாகிஸ்தானில்(Pakistan) கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீடொன்றின் மேல் சரிந்து விழுந்ததில் உள்ளே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகள்
அவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
