மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை தோட்டத்திலுள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் வெடிப்பு(Photos)
கடந்த நாட்களின் பெய்த கடும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுள்ளன.
இந்நிலையில் மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மவுசாக்கலை தோட்டத்தில் காணப்படும் தொழிலாளர் தொடர் குடியிருப்பு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் குடியிருப்பில் காணப்படும் ஒரு வீட்டின் சுவர் மற்றும் நிலம் வெடித்துள்ளதுடன் குறித்த வீட்டின் சமையலறை மற்றும் ஏனைய இரண்டு வீட்டின் சமையல் அறைகளிலும் வெடிப்பு ஏற்பட்டு நிலம் தாழ் இறங்கியுள்ளது.
மக்களின் கோரிக்கை

இந்த நிலம் தாழ் இறங்கியுள்ள இடத்திற்கு கீழ் பகுதியில் 12 அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்று காணப்படுவதுடன் வெடிப்பு ஏற்பட்ட நிலம் தாழ் இறங்கினால் கீழ் பகுதியில் காணப்படும் தொடர் குடியிருப்பும் முழுமையாக பாதிக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தரிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது இவ்விடயம் தொடர்பில் நிறுவனத்திற்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரிய பாதிப்பு ஏற்பட முன் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam