நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடும் மழையினால் ஆற்று நீர மட்டம் உயர்வதால் மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பள்ளத்தாக்குகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மஹா ஓயா ஆற்றுப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மேல் நீரோடை பகுதிகளில் உள்ள ஆற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஉல்ல நகருக்கு அருகில் நீர்கொழும்பு - குருநாகல் வீதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அலவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ பிரதேசங்களில் அமைந்துள்ள மஹா ஓயா ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இந்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அந்த வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளிலும் மழை வீழ்ச்சி மற்றும் ஆற்று நீர் மட்டங்களின் படி, எதிர்வரும் மழையைப் பொறுத்து சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும்,
இதன் காரணமாக, வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரிவுகளில் அமைந்துள்ள தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் கணிசமான வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்பு காணப்படுவதனால், அப் பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாக பயணிக்கும் வாகன சாரதிகளும் கவனம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச சபை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல பிரதேச சபை மற்றும் தெரணியகல, தெஹியோவிட்ட, மாவனெல்லை, வரகாபொல, ருவன்வெல்ல, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய மற்றும் மற்றும் ரம்புக்கன பிரதேச பிரதேசங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ் அனர்த்த நிலைகளின் போது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், அவதானமாக செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
