உடனடியாக வெளியேறுங்கள் :விடுக்கப்பட்டுள்ள சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தால் நிலை - 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று (26) காலை 8.00 மணி முதல் நாளை (27) இரவு 8.00 மணிவரை நடைமுறையில் இருக்கும் என அறிவுறுத்தியுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களி் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வலப்பனை, நில்தந்தஹின்ன, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சுற்றியுள்ள இடங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், மேலும் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடங்கள் - எச்சரிக்கை நிலை 1
பதுளை மாவட்டம்: - ஹல்துமுல்ல – பசறை
களுத்துறை மாவட்டம்: - புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட - இங்கிரியா
மாத்தறை மாவட்டம்: - பிட்டபெத்தர - கொட்டாபொல
நுவரெலியா மாவட்டம்: - நுவரெலியா
கேகாலை மாவட்டம்: - மாவனல்லை
இரத்தினபுரி மாவட்டம்: - கொலொன்னா - அயகம - பலாங்கொடை - கஹாவத்தே - நிவிதிகல- கலவானை – இம்புல்பே – எஹெலியகொடை – இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 2 (மஞ்சள்)
பதுளை மாவட்டம்: - பண்டாரவளை - ஹப்புத்தளை - எல்ல - ஹாலி எல - லுனுகல,பதுளை
கொழும்பு மாவட்டம்: - பாதுக்க
அம்பாந்தோட்டை மாவட்டம்: - கடுவான
களுத்துறை மாவட்டம்: - மத்துகம - ஹொரண
கண்டி மாவட்டம்: உடுநுவர, உடபலத, தும்பனே, கக இஹல கோரல, பஸ்பகே கோரல, பாததும்பர, பன்வில, தொலுவ, மடதும்பர, மினிபே
கேகாலை மாவட்டம்: ரம்புக்கன, ருவன்வெல்ல, தெரணியகல, யட்டியந்தோட்டை, கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, வரகாபொல
குருநாகல் மாவட்டம்: ரிதீகம, மாவத்தகம, மல்லவப்பிட்டிய
மாத்தளை மாவட்டம்: நாவுல, யடவத்த, ரத்தோட்ட, அம்பங்கக கோரல, உக்குவெல
மாத்தறை மாவட்டம்: பஸ்கொட

எச்சரிக்கை நிலை 3
நுவரெலியா மாவட்டம்: வலப்பனே, ஹகுரன்கெத, நிதந்தஹின்ன, மதுரட