திருகோணமலையில் தனியார் காணியில் இருந்து மீட்கப்பட்ட நிலக்கீழ் மிதிவெடி
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - செல்வநகர் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி நேற்று (09) கண்டெடுக்கப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வெளியில் தெரியும் வகையில் புதைக்கப்பட்ட நிலையில் மிதிவெடி இருப்பதைக் கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இரானுவ முகாம்
இதன் பின்னர் பொலிஸார், கிராம உத்தியோகத்தர், மிதிவெடி அகற்றும் பிரிவினர் நேற்று மிதிவெடி இருக்கும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்று இவ் மிதிவெடி விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த மிதிவெடி அகற்றும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் யுத்த காலத்தில் இரானுவ முகாம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
