காணியில்லாத அனைத்து மக்களுக்கும் காணிகள் பெற்றுக்கொடுக்கப்படும் - வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்குள் காணியில்லாத அனைத்து மக்களுக்கும் காணிகளைப்பெற்றுக்கொடுப்பதற்கான விரிவான செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S.Viyalendran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு 01ஆம் குறுக்கு வீதி தொடக்கம் 10ஆம் குறுக்கு வீதி வரையான பகுதிகளை கொங்கிரிட் இட்டு புனரமைப்பு செய்து இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் படி 100,000 கிலோமீற்றர் வீதிகளை புனரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 21 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மிகமோசமான நிலையிலிருந்த இந்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் குறுகிய காலத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் இந்த வீதி புனரமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கிலோமீற்றர் வீதி இவ்வாறு கொங்கிரிட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியலாளர்
ச.துஸ்யந்தன், ஒப்பந்தகாரர் ரவீந்திரமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.





கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri