கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு: ஜெகதீஸ்வரன் எம்.பி
வவுனியா(Vavuniya) வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்று 2009 ஆண்டுக்கு பின் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
காணி விடுவிப்பு
குறித்த காணியை விடுவிக்க அந்த பகுதி மக்கள் பல தடவைகள் முயன்றும் அது பயனளிக்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலக அபிவிருத்திக் குழுக்க கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து வவுனியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும், பிரதி பொலிஸ்மா அதிபருடனும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதனையடுத்து குறித்த காணியினை உடனடியாக விடுவிக்க வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனால் இக் காணி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri