மேல் மாகாணத்தில் பாரியளவில் அதிகரித்த காணி விலை
கொழும்பு தவிர்ந்த மேல் மாகாணத்தில் காணிகளின் விலை 74 வீதத்தில் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் முதல் தர காணி நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்த நில விலைக் குறியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்ட்டுள்ளது.
வருடாந்த அடிப்படையில், 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் சராசரியான விலை அதிகரிப்பு 15 வீதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் முதலீட்டாளர் ஒருவர் காணியில் முதலீடு செய்திருந்தால், அது 4 முதல் 5 ஆண்டுகள் வரை வைத்திருந்தால், அவரது ஆரம்ப முதலீடு காலப்போக்கில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று குறியீட்டு எண் தெரிவித்துள்ளது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan