உறுதிகளுடன் அடாத்தாக நுழைவோம்: எச்சரித்த தையிட்டி காணி உரிமையாளர்கள்
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.
இல்லையேல் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என அவர் பகிரங்க அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளார்.
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வட பிராந்திய சந்திப்பு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சி மாற்றம்
"யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகியும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு வகையான போராட்டங்கள் ஈடுபட்டும், மனுக்களை கொடுத்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.
தற்போது வந்துள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் இதனை வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்த்துள்ளோம்.

முப்படையினரின் அபகரிப்புக்கு அடுத்தபடியாக மதத்தின் பெயராலும் காணி அபகரிக்கப்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமான 150 பரப்புக் காணியை ஆக்கிரமித்து, மொரட்டுவ பல்கலைக்கழக கட்டடக்கலை நிபுணர் ஒருவர் பௌத்த தூபி ஒன்றை நிறுவியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நாம் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், முப்படைப் பாதுகாப்புடன் அங்கு பூஜைகள் நடக்கின்றன.
மிக விரைவாக எங்களுடைய காணிகள் எங்களுக்கு வேண்டும். நாட்டினுடைய பொருளாதாரத்தில் விவசாயம், கடற்றொழில் ஊடாக மிகப்பெரும் பங்காற்றிய வலிகாமம் வடக்கு மண்ணை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தால், மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள்.
காணிகளை மீட்பதற்காக எந்த நிலைக்கும் கீழிறங்க நாங்கள் தயாராக உள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் காணி உறுதிகளுடன் காணிகளுக்குள் நுழைவோம். எம்மோடு அனைத்துத் தரப்பினரும் வரவேண்டும்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam