முல்லைத்தீவு காணிப் பிரச்சினை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
இன்று (16.08.2023) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொதுமக்களின் காணிப்பிரச்சினைகள்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகைக்குட்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், அதிலும் குறிப்பாக கொக்குளாய் நாயாறு பிரதேசத்திற்கு இடைப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
மேலும், குருந்தூர் மலையை அண்டிய பகுதியில் காணப்படுகின்ற தொல்லியல் மற்றும் வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை விடுவித்தல் தொடர்பாகவும் புதுக்குடியிருப்பு பகுதியில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் பியந்தகுமார, வனவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பியந்த செனவீரட்ண , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், திலீபன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்(காணி), பிரதேச செயலாளர்கள், கமநல திணைக்களத்தின் உதவியாணையாளர், மாவட்ட வனவள அதிகாரி, மகாவலி எல் வலைய முகாமையாளர், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், காணிக்கிளையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
