கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - ஆபத்தான நிலையில் தந்தை
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணி பிரச்சினையால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தை மற்றும் மகன் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 வயதுடைய மகன் நேற்று முன்தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தங்கவேலு சண்தலு சந்துஷ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் கைது
ஜப்பானில் வேலை பெறுவதற்காக அவர் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஹகுரன்கெத்த - உடவத்தகும்புரவில் கடந்த 19 ஆம் திகதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்களில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களுக்கு மிளகாய் பொடியை கொடுத்து தாக்கியதாக கூறப்படும் பெண் ஒருவரை ஹகுரன்கெத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவ்விரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணை
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றதையடுத்து, கடந்த 19ஆம் திகதி இரவு பிரதான சந்தேகநபரின் வீட்டிற்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.
தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |