உறவினர்களின் நிலம் பறி போகிறது - வர்த்தமானி அறிவித்தலை திரும்ப பெறுங்கள்: ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா
கம்பஹா முத்துராஜவெல பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலம் மற்றும் அதன் அருகில் உள்ள அதிகளவான பரப்பை கொண்ட நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிமல் லங்சா, வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளாது வர்த்தமானி அறிவித்தலை திரும்ப பெற வேண்டும் என லங்சா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக பிரதேச மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாகவும் தனது உறவினர்களுக்கு சொந்தமான காணிகளும் இதன் மூலம் பறிபோகும் நிலை காணப்படுவதாகவும் நிமல் லங்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri