உளுந்து பயிர்ச்செய்கையை சேதப்படுத்தி காணிகளை கையகப்படுத்தும் வனவளத்துறை (VIDEO)
செட்டிகுளம் மெனிக்பாம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பயிரிடப்பட்ட உளுந்து பயிர்ச்செய்கையை சேதப்படுத்தி எல்லைக் கற்களை நாட்டி காணிகளை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் 850 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரமாக உளுந்து பயிர்ச்செய்கையை பல வருடங்களாக செய்து வருகின்றனர்.
இம்முறையும் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் உளுந்து பயிரிட்டுள்ளனர். குறித்த உளுந்து பயிரிடப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் பூத்துக் காணப்பட்ட உளுந்து செடிகளுக்குள் தமது உழவு இயந்திரத்தை ஓடிச் சென்று அவ் உளுந்து பயிர்களை சேதப்படுத்தி எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர்.
இதனால் பலரது உளுந்து செய்கை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், தற்போதைய பொருளாதார நிலைக்கு ஈடு கொடுக்க முடியாது கடன் பட்டும், வட்டிக்கு பணம் பெற்றும், உளுந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதாகவும் இந்நிலையில் வனவள திணைக்கள அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாடு தொடர்பாக மக்கள் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், தமது உளுந்து பயிர்ச்செய்கை நிலங்களை தமது வாழ்வாதாரத்திற்கான மேட்டு நில பயிர்ச்செய்கைக்கு பெற்றுத் தர உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam