தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உரிமத்தை ரத்து செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை
இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்யுமாறு விவசாய கால்நடை வள மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவிடம் இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளார்.
குறித்த தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வழங்குதல் தொடர்பான நிபந்தனைகளை மீறி செயல்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடக அமைச்சினூடாக வழங்கப்படும் உரிமைத்திற்கு மேலதிகமாக இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்கமைக்கும் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் ஒளிபரப்பு அலைவரிசை உரிம நிபந்தனைகளை மீறி உள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அலைவரிசைக்கு எதிராக உரிய நடவடிக்க எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
குறித்த தனியார் ஊடகம் தம்மைப் பற்றி போலியானதும் வெறுப்புணர்வுவைத் தூண்டும் வகையிலும் குறித்த ஊடகம் செய்திகளை வெளியிடுவதாக ஊடக அமைச்சிடம், அமைச்சர் லால்காந்த முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri