யாழில் காணாமல் போன லலித் - குகன் மீதான விசாரணை.. முன்னாள் எம்பி சிஐடியில் வாக்குமூலம்
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் மற்றும் குகன் மீதான விசாரணை தொடர்பில் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித்குமார இன்று கொழும்பில் உள்ள குற்றப்பலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்தார்.
கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் 2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் மற்றும் குகன் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அளிக்கப்பட்ட முறைப்பாடு
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அஜித் குமார கூறியதாவது,
"10.12.2010 அன்று, மக்கள் போராட்ட இயக்கம் யாழ்ப்பாணம் நகரில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை, நடத்த லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்காக நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அந்த இருவரும் கடத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்போதைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது. இந்தச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஒவ்வொரு அரசாங்கத்தையும் நாங்கள் கோரினோம்.
இந்த அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து வாக்கு மூலம் அளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எனக்கு அறிவித்திருந்தது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



