பாதாள உலகக் குழு விவகாரம்: தெற்குக்குக் கறுப்பு முத்திரை! வடக்குக்கு வெள்ளையடிப்பு!
பாதாள உலகக் குழு விடயத்தில் தெற்குக்குக் கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடம்பெறுகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெற்குக்கு கறுப்பு கரையை ஏற்படுத்திவிட்டு வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது.
கறுப்பு முத்திரை
பாதாள உலகக் குழு, ஐஸ் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட விடயங்கள் தெற்கு மீது சுமத்தப்படுகின்றது. ஆனால், வடக்கில் இருந்தே இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இது பற்றி கதைக்கப்படுவதில்லை.

மாறாக தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இப்படி செய்யப்படுகின்றது” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |