பொருளாதார நெருக்கடி:வெளியீடுகளை நிறுத்திய அரச அச்சு ஊடகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், இலங்கை அரச அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் தனது வார வெளியீடுகளை மாத வெளியீடுகளாகவும் சில சஞ்சிகைகளை வெளியிடுவதை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் விற்பனை திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அச்சுக்கான காகிதங்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
மாத சஞ்சிகைகளாக மாறிய வார சஞ்சிகைகள்
இதன் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வார சஞ்சிகைகளான புதுசரண பௌத்த சஞ்சிகையை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் மாத்திரம் வெளியிடப்படும்.
அத்துடன் தருணி மற்றும் மிஹிர சஞ்சிகைகள் மாதம் தோறும் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
நிறுத்தப்படும் வெளியீடுகள்
மேலும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஆரோக்கியா, சினிமா சஞ்சிகையான சரசவிய, சுபசெத, தமிழ் சஞ்சிகைகளான வண்ண வானவில், குட்டிச் சுட்டி ஆகியவற்றை வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாதாந்தம் வெளியிடப்படும் சஞ்சிகைகளுக்கு சந்தையில் நிலவும் கேள்விக்கு அமைய சஞ்சிகைகளை பெற்றுக்கொள்ளுவதற்காக முன்னறிவிப்பு செய்யுமாறு முகவர்களிடம் கேட்டுக்கொள்வதாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் விற்பனை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த நிலையில், தினகரன், தினகரன் வார மஞ்சரி, தினமின, சிலுமின ஆகிய பத்திரிகைகள் வழக்கம் போல் வெளி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri
