கொழும்பு சிறுவர் வைத்தியசாலை பொது மக்களிடம் விடுத்துள்ள அவசர கோரி்க்கை
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு இரத்தப் பரிசோதனைக் கருவிகள் உடனடியாகத் தேவைப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் உதவி கோரியுள்ளது.
நன்கொடையாளர்கள் அல்லது நிறுவனங்கள் கூடிய விரைவில் முன்வருமாறு வைத்தியசாலையின் துணை இயக்குநர் டொக்டர் சந்துஷ் சேனாபதி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரத்த பரிசோதனை கருவி
இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளமையினால் குழந்தையின் இரத்த கலவை குழந்தைக்கு ஏற்றதா என அவ்வப்போது பரிசோதிக்கப்படும் என்பதுடன், கலவையில் பற்றாக்குறை உள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார்.
இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் 15 படுக்கைகள் இருப்பதாகவும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளால் தொடர்ந்து நிரம்பி வழிவதாகவும், இந்த சோதனைக் கருவி மூலம் 15 குழந்தைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
