காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(24) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
காத்தான்குடி, அப்றார் நகர் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி நெடுஞ்சாலை வீதி வழியாக மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போதே கல்லடி பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் போது உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
