காதலனுடன் இணைந்து மகளை துஸ்பிரயோகம் செய்த பெண்.. நீதிமன்றின் உத்தரவு
மகளை காதலனுடன் இணைந்து துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் குறித்த காதலன் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இடம்பெற்றுள்ளது.
3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தாயின் மோசமான செயல்
50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATSAPP ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.

அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார். அப்பெண்ணிற்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சந்தேக நபரான 50 வயது சந்தேக நபரை சந்தித்துள்ளார். இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.
இதன்போது, தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட சந்தேகநபர் அப்பெண்ணின் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள நிலையில் அதற்கு அத்தாய் உதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை