நாட்டின் கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
நாட்டின் கட்டுமானத்துறையில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என அரச பொறியியலாளர் சேவை சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொறியியலாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் பாரியளவிலான கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும், ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நீர்த் தேக்கங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க பொறியியல் சேவையில் 1520 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்பொழுது 670 பேர் மட்டுமை சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிகவும் அனுபவம் நிறைந்த பொறியியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பொறியியற் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த புதியவர்களும் வெளிநாடு செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் இது ஓர் ஆபத்தான நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
300 பொறியியலாளர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருந்தாலும் இதுவரையில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என வஅர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை நீடித்தால் எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் பெரும் நெருக்கடி நிலை உருவாகும் என அரச பொறியியலாளர் சேவை சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.



