பிரித்தானியாவில் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் எம்பி ஒருவர் கைது
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் நோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், பாலியல் சீண்டல் மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை 60 வயதுடைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பெண் ஒருவருக்கு எதிரான பாலியல் சீண்டல், குழந்தை கடத்தல் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி
இடைநீக்கம்
வடகிழக்கு சோமர்செட் மற்றும் ஹன்ஹாம் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான டான் நோரிஸ், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நோரிஸ் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்கம், நோரிஸ் கட்சியின் கொறடா உத்தரவையும் இழந்திருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.
இதன் விளைவாக, அவர் இனி Commons அவையில் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பங்கேற்க முடியாது.
தொடர்ந்து நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை காரணமாக, இந்த நேரத்தில் மேலும் எந்த தகவலையும் வழங்க முடியாது என்று தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |