பிரித்தானியாவில் உணவு பொருட்களில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, பிரித்தானிய பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் 'ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஒக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2025ஆம் ஆண்டிலிருந்து, வட அயர்லாந்துக்கு அனுப்பப்படும் மற்ற பொருட்களின் மீதும் இந்த லேபில் ஒட்டப்பட உள்ளது.
இந்த மாற்றம் வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தங்களில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.
பிரச்சினையும் தீர்வும்
பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கும் வட அயர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள அயர்லாந்துக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும்.
எனவே அயர்லாந்து வழியாக வட அயர்லாந்துக்குள் செல்வதும், ஐரோப்பிய ஒன்றியம் வழியாக வட அயர்லாந்து செல்வது போன்றது தான் என கூறப்படுகின்றது.
ஆகவே, வட அயர்லாந்துக்குள் இறைச்சி, பால் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதில் அன்றாட பிரச்சினைகள் உருவாகின.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வட அயர்லாந்துக்கு அனுப்பப்படும் இறைச்சி, பால் போன்ற பொருட்களில், 'ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட உள்ளது.
இதனால், ஆவண சரிபார்ப்பு முதலான விடயங்களுக்காக, தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்படும் என்பதால், இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
