இலங்கை தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமெரிக்க திறைசேரி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனை சந்தித்து உரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு இன்றைய தினம் (23.06.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததையும், இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வலுவான உள்நாட்டு உரிமையையும் கண்டு மகிழ்ச்சி அடைவதாகச் செயலாளர் யெலன் குறிப்பிட்டுள்ளார்.
உலக தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி
மேலும், இலங்கையின் கடனாளிகள் கடன் மறுசீரமைப்பைச் சரியான நேரத்தில் வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளதுடன், 21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிர்த்துப் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலக தலைவர் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் புதன்கிழமை (21.06.2023) பாரிஸ் சென்றுள்ளார். இதன்போதே இவர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |