குவைத் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு
நிர்வாகத்தைப் பொறுப்பேற்று, சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் குவைத் பிரதமர் பதவி விலகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் 85 வயதான ஆட்சியாளர் எமிர் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மகனான பிரதம மந்திரி ஷேக் அகமது நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து உருவாக்கப்பட்ட மூன்றாவது அரசாங்கம் இதுவாகும். அமைச்சரவை இரண்டு முக்கிய விடயங்களில் நாடாளுமன்றத்துடன் முரண்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்
இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும், குவைத் நாட்டினரின்
கடன்களை இரத்துச் செய்வதும் ஆகிய இரண்டு விடயங்களில் நாடாளுமன்றம் ஒப்புதல்
வழங்கியது.
எனினும் அமைச்சரவை இந்த இரண்டு யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam