இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்த குவைத்
கோவிட்டை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு குவைத் உடனடியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் அடிப்படையில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பல தெற்காசிய நாடுகளிலிருந்து அனைத்து விமான வருகைகளையும் மேலதிக அறிவிப்பு வரும் வரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
எனினும் இந்த முடிவில் சரக்கு விமானங்கள் உள்ளடங்கவில்லை.
நாடுகளிலிருந்து குவைத்துக்குள் நுழைவோர் குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே வேறு நாட்டிலிருந்திருக்க வேண்டும் என்று குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமது நாட்டில் தடுப்பூசி போடாத குடிமக்கள் மே 22 முதல் வெளிநாடுகளுக்குச்
செல்வதைத் தடை செய்வதாக குவைத் கடந்த வாரம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 3 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan