குவைத் குடியிருப்பொன்றில் தீ விபத்து!
குவைத்தின் Al-Reggaயில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் பல தளத்தில் இன்று(1) ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சுமார் ஐந்து பேர் இறந்துள்ளதுடன் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீ விபத்து
தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாரிகள் கூற்றுப்படி இந்த விபத்தானது கடந்த வருடம் Mangaf-யில் ஏற்பட்ட தீவிபத்தை ஒத்ததாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரத்திலிருந்து குதித்த மூன்று எரிந்த உடல்கள் மீட்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்த வெளிநாட்டினர் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
mangaf தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
