குருந்தூர் மலை வழக்கு தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை விடுத்த அகத்தி அடிகளார்
கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று எமது தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை முன்வைக்க வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்றையதினம்(27.04.2023) முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் நிலையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
திரிசூலம் மீள நிறுவப்பட வேண்டும்
பிடுங்கப்பட்ட திரிசூலம் மீள நிறுவப்பட்டு ஆதி சிவன் கோவில் வழிபாட்டுரிமையை மீளபெற வழிவகை கோர வேண்டும்.
இதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை தாரா வகை சிவலிங்கம் ஏன் மேலதிக ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை என அறிந்துகொள்ள வேண்டும்.
அந்த திரிசூழத்தை சேதப்படுத்தி 3 துண்டாக உடைத்து சட்டவிரோதமாக அமைத்த தாதுகோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக தொல்லியல் திணைக்களம் உரிய விளக்கம் தர வேண்டும்.
அதேநேரம் மேற்படி விடயங்களை நாடாளுமன்றில் முல்லைத்தீவு தொகுதி வன்னி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழமாக வலியுறுத்தி அரசிடம் உடனடி தீர்வை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.