குருந்தூர் மலைக்கு வாருங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுடைய குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், ஏற்கனவே நீதிமன்றக் கட்டளையின்படி சைவ வழிபாடுகள் மேற்கொள்ளலாம் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைவருக்கும் வேண்டுகோள்
அதற்கமைய நாங்கள் எல்லோரும் இம்மாதம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 09 மணிக்கு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடத்தில் ஒரு பொங்கல் வழிபாட்டினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
அனைவரையும் அந்த பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan