பயணத்தடைக்கு மத்தியில் சத்தமின்றி பறிபோகும் தமிழர் நிலங்கள்!
தமிழரின் தாயகப் பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலை பகுதியை ஆக்கிரமிப்பதில் பெளத்த பிக்குகள் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர்.
ஆனால் இதனை தமிழர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் முறியடித்து வந்தனர். இருப்பினும் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் அப்பகுதியை ஆக்கிரமித்து பெளத்த விகாரை அமைப்பதற்கு பிக்குகளும், இராணுவத்தினரும் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில், நாட்டில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த தமிழரின் பூர்விக நிலமான முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருஸ்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13.06.2021 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தொகுப்பு,
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri