அரச பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பரிதாபமாக பலி
குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.
பொல்கொல்ல பிரிவெனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தேவகிரிய, தித்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய மகனும், 62 வயதுடைய தாயும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தின் பின் சில்லில் சிக்கி இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
