குருநாகல் மாநகர முதல்வர் பதவி நீக்கம்
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குருநாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண பதவியில் இருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவருக்கு எதிராக வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் ஃப்ளீட் வசந்த கரன்னாகொட இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
துஷார சஞ்சீவ விதாரணவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 18 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் துஷார சஞ்சீவ விதாரண குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்றும் ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குருநாகல் முதல்வர் தனது பதவியை இராஜினாமா
செய்ததாகக் கருதப்படும் வர்த்தமானி அறிவித்தலையும் ஆளுநர் வெளியிட்டிருந்தார்.