குருக்கள்மடம் மனித புதைகுழி.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குருக்கள்மடம் மனித புதைகுழியை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பில் உள்ள ஆலோசகர் நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (CJMO) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு டிசம்பர் 07ஆம் திகதி அன்று ஹஜ் யாத்திரையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் யாத்ரீகர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கடத்தியமை, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொன்று புதைத்ததாகக் கூறப்படும் வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முந்தைய விசாரணையில், நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபர், காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோருக்கு மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியிருந்தார்.
சட்டமா அதிபருக்கு உத்தரவு
அதன்படி, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டப் பிரதிநிதிகளும், பொலிஸ் தலைமை அதிகாரியும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இருப்பினும், சட்டமா அதிபர் சார்பாக யாரும் முன்னிலையாகவில்லை.
காணாமல் போனோர் அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முறையாக தோண்டப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அலுவலகம் தொடர்ந்து நிலைநிறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குருக்கள்மடத்தில் சந்தேகத்திற்கிடமான இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால், தங்கள் அலுவலகம் பார்வையாளர்களாக செயல்படத் தயாராக இருப்பதாக சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி சமர்ப்பிப்பைக் கருத்தில் கொண்டு, குருக்கள்மடம் மனித புதைகுழியை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பில் உள்ள ஆலோசகர் நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (CJMO) நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், அடுத்த விசாரணையின் போது சட்டமா அதிபர் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
