குருக்கள்மட மனிதப்புதைகுழி : ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி
1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை நேற்றுமுன்தினம்(14.05.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது.
அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமூகமளித்திருந்தனர்.
அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மீண்டும் மேலதிக நடவடிக்கைகளுக்காக
அந்த நிலையில் சடுதியாக மழை குறிக்கிட்டதன் நிமித்தம் கள ஆய்வினை முன்கொண்டு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் குறித்த வழக்கு நேற்று(15.05.2026) திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது.

அந்த வகையில்; அப்பகுதியில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு மன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி கட்டளை பிறப்பித்துள்ளது.
இந்த அடிப்படையிலே ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஸ்கேனிங் பொறிமுறைகளை ஆரம்பிக்க உள்ளனர்.
குறித்த இந்த வழக்கானது மீண்டும் மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மன்றிலே அழைக்கப்பட உள்ளது என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.



