குறிகட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து நாளையதினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற சிரமங்கள்
வளிமண்டல திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை (24)கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து போக்குவரத்து இடம்பெறமாட்டாது என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
