குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியின் நிலம் சீராக்கலில் ஈடுபடும் இளைஞர்கள்
முல்லைத்தீவு குமுழமுனையிலுள்ள கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியின் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
சுமார் 4 கோடி ரூபா நிதிமுதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த கேணியின் புனரமைப்பில் கிராமத்தின் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கின்றது.
இன்றைய நாளில் (17.03.2024) கேணியின் நிலம் சீரமைக்கும் பணிகளில் குமுழமுனை இளைஞர்கள் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
ஒழுங்குபடுத்தலில் இன்றைய முயற்சி
கேணி புனரமைப்புக் குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய முயற்சி முன்னெடுக்கப்பட்ட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1940 ஆம் ஆண்டில் கட்டப்பட்டிருந்த கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்தின் கேணியின் மீள் புனரமைப்புப் பணிகள் இப்போது தான் முன்னெடுக்கப்படுவதாக ஆன்மிக ஈடுபாட்டாளரும் தனவந்தருமான குமுழமுனையின் முதுசங்களில் ஒருவராக வாழ்ந்துகொண்டிருக்கும் கந்தசாமி ஐயாவின் நினைவுகள் இவ்வாறிருக்கின்றன.
எதிர்வரும் சித்திரை மாதத்தில் புதுவருட தினத்தில் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலின் திருவிழா வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |