மக்களின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்ற குமுதினி படகின் சமநிலை பரிசோதனை(Photos)
வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் நேற்று(18.07.2023) மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை - நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன் என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில், கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் பூரண ஒத்துழைப்பு
இதன்போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த
பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை
குறிப்பிடத்தக்கது.













